புன்னைநல்லூர் முருகன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

புன்னைநல்லூர்  முருகன் கோவிலில்  ஐம்பொன் சிலைகள் கொள்ளை

தஞ்சாவூர், செப்.11 -

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் பழமையான முருகன் கோவிலில் மூன்று ஐம்பொன் சிலைகளும், ஒரு வெண்கல கலசமும் கொள்ளை போனது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே 200 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலி்ல் கத்தரிநத்தத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) பூஜைகளை செய்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலுக்குள் சென்று பார்த்த போது, அங்கு கிரில் கேட்டு வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றேகால் அடி உயர முருகன் சிலை, தலா ஒரு அடி உயரத்தில் வள்ளி- தெய்வானை சிலைகள், வெண்கல கலசம் என ரூ.3.50 லட்சம் மதிப்பிலான சிலைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கிரில் கேட்டை உடைத்து சிலைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%