புரட்டாசி முதல் சனிக்கிழமை; திருப்பதியில் 82,042 பேர் தரிசனம்
Sep 23 2025
35

திருமலை, செப். 21–
திருப்பதியில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் 82,042 பேர் தரிசனம் செய்தனர். ரூ. 4.59 கோடி உண்டியல் காணிக்கை வந்தள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரமும் மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (செப். 20) ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82,042 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் 6 முதல்8 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதுமட்டுமின்றி, நேற்று ஒரே நாளில் ரூ. 4.59 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?