புல்லட் ரயிலுக்கு இப்போதே டிக்கெட் எடுக்கலாம்! அஸ்வினி வைஷ்ணவ்

புல்லட் ரயிலுக்கு இப்போதே டிக்கெட் எடுக்கலாம்! அஸ்வினி வைஷ்ணவ்


 

நாட்டில், முதல் புல்லட் ரயில் சேவையானது வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர், வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி புல்லட் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என்றார்.


முதல் பகுதியாக, சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். அதன் பிறகு, வாபி முதல் சூரத் வரை விரிவாக்கம் செய்யப்படும். தொடர்ந்து வாபி முதல் அகமதாபாத் வரையிலும், படிப்படியாக தானே முதல் அகமதாபாத் வரையிலும், மும்பை முதல் அகமதாபாத் வரையிலும் என புல்லட் ரயில் சேவை தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றார்.


புல்லட் ரயிலுக்கு நீங்கள் இப்போதேகூட டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இது வரும் 2027ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும் என்று சிரித்தபடியே கூறினார்.


508 கிலோ மீட்டர் தொலைவுக்கு மும்பை முதல் அகமதாபாத் வரை அமைக்கப்பட்டு வரும் அதி விரைவு ரயில் சேவையான புல்லட் ரயிலுக்கான கட்டமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேம்பாலங்கள், சுரங்கங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் துரிதமாக நடக்கிறது.


இந்த ரயில் சேவை தொடங்கியதும், ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இதனால் பயண நேரம் 2 மணி நேரங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளும் துரித வேகத்தில் நடப்பதால் 2027ல் பணிகள் நிறைவு பெற்று சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இந்த மாதம் தொடங்கப்படும் என்றும், ஜனவரி மத்தியில், இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%