அறுசீர் மண்டிலம்.
பாக்கள் எல்லாமே
சிறப்பதில்லை
பாவை எல்லோரும்
அழகில்லை!
ஆக்கம் எல்லாமே
உயர்வதில்லை
அழகு எப்போதும்
நிலைப்பதிலை!
ஊக்கம் இல்லாமல்
இலக்கில்லை
உயிரே இல்லாமல்
உடலில்லை!
பூக்கள் எல்லாமே
மணப்பதில்லை
புரட்டு யாவும்தான்
பொலிவதில்லை!
தகவாய்ச் செயலையே
செய்திட்டால்
தானாய்ப் புகழன்றோ
தேடிவரும்!
வகையாய்ச் செயல்களையே
வரைந்திட்டால்
வண்ணம் பொலிவாக
அமைந்துவிடும்!
அகமும் புறத்தோடு
சேர்ந்திட்டால்
அழகு எப்போதும்
மாறாது
நகமும் சதையும்போல்
இருந்திட்டால்
நாளைப் புகழுடம்பு
கண்டிடுமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%