பூமி - சூரியன் இடையிலான சராசரி துாரம் 15 கோடி கி.மீ., பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணி நேரம், சூரியனை சுற்ற 365 நாட்கள் ஆகிறது. பூமி மணிக்கு 1600 கி.மீ., வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது. ஆனால் இதை நாம் உணர முடிவதில்லை. இதன் வேகம் நிலையாக இருப்பதே இதற்கு காரணம். பூமி சுற்றும் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே, உணர முடியும். இதுபோல தான் விமானம், காரில் பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் வாகனம் ஓடுவதை உணர முடியாது. வேகத்தில் மாற்றம் ஏற்படும்போது உணர முடிகிறது.
அதிகரிக்கும் கார்பன் வெளியீடு
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு அளவு 2025க்குள் (3810 கோடி டன்) புதிய உச்சத்தை தொடும். இது 2024ஐ விட 1.1 சதவீதம் அதிகம். மேலும் நில பயன்பாடு மாற்றம் காரணமாக வெளியாகும் கார்பன் வெளியீடு 410 கோடி டன் சேர்த்து மொத்தம் 4220 கோடி டன் ஆக இருக்கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் அதிகபட்சமாக சீனா 1230 கோடி டன் கார்பனை வெளியிடுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்ளன.
நிலவை மோதுமா விண்கல்
'2024 ஒய்.ஆர்4' விண்கல், 2032 டிச. 22ல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு 4.3 சதவீதமாக இருந்தது. இது தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதன் விட்டம் 220 அடி. மணிக்கு 48 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. ஒருவேளை இது நிலவில் மோதினால் 950 மீட்டர் அகலம் அளவில் பள்ளத்தை உருவாக்கி, அதன் துகள்கள் பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளது. இது ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டுவை விட 500 மடங்கு வெடிப்பை வெளியிடும். 10 ஆயிரம் டன் பாறை துகள் வெளிப்படும். இந்த விண்கல்லை 2024ல் நாசா கண்டறிந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?