புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் நிகழ்வு பென்னாகரத்தில் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையில் நடைபெற்றது.
புத்தாண்டை உற்சாகமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுவது வழக்கம். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவர்களுக்கான புத்தகங்களை வாசித்து வாசித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பாக வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?