பேண்டேஜ் துணி உற்பத்திக்கு தொழில் பூங்கா நிறுவ ராஜபாளையம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
ராஜபாளையம்: பேண்டேஜ் எனப்படும் மருத்துவத் துணி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. சீனா 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேண்டேஜ் துணி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்களும்,50-க்கும் மேற்பட்ட பெரிய நூற்பாலைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான விசைத்தறிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களால் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராஜபாளையம் பகுதியில் தினசரி ரூ.2 கோடி அளவுக்கு பேண்டேஜ் துணி நெசவு செய்யப்படுகிறது.
இதில் விசைத்தறி தொழிலாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள், மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள், மருத்துவத் துணி ஏற்றுமதியாளர்கள் என 4 படிநிலைகள் உள்ளன. பேண்டேஜ் துணி உற்பத்தியில் தொழிலாளர்களைவிட சிறு விசைத்தறி உரிமையாளர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் மருத்துவத் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து நூலை பெற்று நெசவு செய்து கொடுக்கின்றனர். அதன்பின் அந்த துணி சைசிங் செய்யப்பட்டு மருத்துவ துணியாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது நூல் 5% வரி அடுக்கிலும், நெசவு செய்த பேண்டேஜ் துணி 12% வரி அடுக்கிலும் இருந்ததால், ஜிஎஸ்டி ரிட்டர்ன் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் நிலவியது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி சீரமைப்பில் வரி விதிப்பு இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், பேண்டேஜ் துணி, நூல் ஆகிய இரண்டும் 5% வரி அடுக்கில் கொண்டு வரப்பட்டதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்: வெனிசுலாவில் கச்சா எண்ணெய் கட்டமைப்பை நவீனமாக்க அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிரிஸ் ரைட் கூறும்போது, ``வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடை படிப்படியாக நீக்கப்படும். வெனிசுலா கச்சா எண்ணெயை மீண்டும் விற்கப் போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்கில் வரவு வைக்ப்படும்.
இந்தப் பணம் வெனிசுலா மக்களுக்காக பயன்படுத்தப்படும். 2000-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் கார்பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்றும் கம்பெனிகளை வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் அரசுடைமையாக்கினார்.
அந்த நிறுவனங்களுக்கு எல்லாம் இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது. வெனிசுலா எண்ணெய் விற்பனை மூலம் முதலில் கிடைக்கும் பணம், அமெரிக்க நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்க பயன்படுத்தப்படாது. அது நீண்ட கால பிரச்சினை” என்றார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ”அமெரிக்கா விற்பனை செய்ய 5 கோடி பேரல் கச்சா எண்ணெ்யை வெனிசுலா விடுவிக்கும். இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டாலர்” என்றார்.