பொங்கலுக்குள் த.வெ.க.வில் அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்: கே.ஏ.செங்கோட்டையன் உறுதி
Jan 05 2026
12
ஈரோடு, ஜன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்த நாளையொட்டி கட்சியின் அலுவலகத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பா கவுண்டன் புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267வது பிறந்தநாளை ஒட்டி அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான கே.ஏ.செங்கோட்டையன் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக மக்கள் 10ல் 8 பேர் தளபதி விஜய் முதல்வராக வரவேண்டும் என்று விரும்புகின்றனர்.
2026 ஆம் ஆண்டானது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. மேலும் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய, புதிய வரலாற்றை படைக்கக்கூடிய தலைவராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளார். அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்கள் வருகின்ற பொங்கலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சத்தியபாமா, தமிழக வெற்றிக்கழகத்தின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?