சென்னை: அறுவடைத் திருநாளான பொங்கலைக் கொண்டாடும்வகையில், ரேசன் கடைகள் மூலம், வேட்டி - சேலை, பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றைக் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. ரூ. 1000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கு தமிழகத்தில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகளும் நிறை வடைந்துள்ளன. 1.77 கோடி வேட்டிகளும், 1.77 கோடி சேலை களும் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றில் 85 சதவிகிதம் ரேசன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.இவை தவிர, ரொக்கம் மற்றும் கரும்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?