போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பையில் சுரங்கப் பாதைகள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பையில் சுரங்கப் பாதைகள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்


 

மும்பை: நாட்​டின் வர்த்தக தலைநக​ரான மும்​பை​யில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.


இதுதொடர்​பாக மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் மும்​பை​யில் நேற்று கூறிய​தாவது: மும்​பை​யில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்​தடங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது மும்பை பெருநகர போக்​கு​வரத்​தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்​கிறது.


காலை, மாலை நேரங்​களில் 15 கி.மீ. ஆக இருக்​கிறது. மும்​பை​யின் போக்​கு​வரத்து நெரிசல் பிரச்​சினைக்கு தீர்வு காண சுரங்​கப் பாதைகளை அமைக்க திட்​ட​மிட்டு உள்​ளோம். அதாவது போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடி​யில் புதி​தாக சுரங்​கப் பாதைகள் அமைக்​கப்​படும். அடுத்த 5 ஆண்​டு​களில் மும்​பை​யின் பல்​வேறு பகு​தி​களில் சுரங்​கப் பாதைகள் மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரும்.


மும்பை புறநகர் ரயில்​களில் தின​மும் 90 லட்​சம் பேர் பயணம் மேற்​கொள்​கின்​றனர். புறநகர் ரயில் சேவையை மேம்​படுத்த பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. மும்பை மெட்ரோ ரயில்​களை போன்று அனைத்து புறநகர் மின்​சார ரயில்​களி​லும் ஏசி வசதி செய்​யப்​படும். இதற்​காக ஒரு பைசாகூட கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது. இவ்​வாறு முதல்வர் பட்னாவிஸ்​ தெரி​வித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%