போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்; இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார். இதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இது தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது, இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்து உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிக்கரமாகவும்,விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தகளரி தொடர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?