மகன்களே... சொத்துதான் பிரதானமா?.

மகன்களே... சொத்துதான் பிரதானமா?.



பன்னீர் தெளித்த 

சொத்து சுகமின்று

கண்ணீரைத் தருகிறது!


என் வியர்வை வாசனை

இந்தச் சொத்தில்

இன்னும் இருக்கிறது,

அதைப் பங்கிடச்

சொல்லவில்லை,

புரிந்து கொள்ளச் சொன்னேன்!


சொத்து அளவிடும் 

காகிதத்தில்

அப்பா என்ற வார்த்தைக்கு

எத்தனை சதவீதம் 

கொடுத்தீர்கள்?


நான் சுமந்த சுமைகள்

விழித்திருந்த இரவுகள்

உங்கள் பசிக்காக

என் ஆசைகளை

விற்ற தருணங்கள் 

அவையெல்லாம்

எந்த பட்டாவில் எழுதப்பட்டன?


நீங்கள்

சண்டைபிடிக்கிறீர்கள்,

நான் மட்டும்

உங்களுக்கிடையில்

அநாதையாய் நின்று கொண்டிருக்கிறேன்…


என் வியர்வை கலந்த மண்

இன்று

பகை விதைக்கும் நிலமாயிற்று,

அதில்

அப்பா என்ற விதை

முளைக்க இடமில்லாமல்

போனது!


சொத்து பிரிந்தால்

உங்கள் கோபம் தீருமோ 

தெரியாது,

ஆனால் மகன்கள் 

பிரிந்த நாளில்

ஒரு தந்தை

உள்ளுக்குள் 

இறந்து விடுகிறான்!



முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%