மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பலன்: ஸ்டாலின் பெருமிதம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பலன்: ஸ்டாலின் பெருமிதம்


4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்! தடம் மாறாத பயணம் – தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து,


ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின் 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள்!


நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று முதல்வர் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%