மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை

மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை

மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் அவர்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி அவர்களும்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கதர்ப்பகராஜ், இஆப அவர்களும் இன்று

(07.10.2025) துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சியில் உள்ள

எம்கேஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் துறைவாரியாக பதிவு

செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின்

சேவைகள், திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன்

ஸ்டாலின் என்ற முன்னோடி திட்ட முகாம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு மாநிலம்

முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புறம்

மற்றும் ஊரக பகுதிகளில் இதுநாள் வரை மொத்தம் 258 முகாம்கள் நடைபெற்றுள்ளது.

அதன்படி இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர்

அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு

உட்பட்ட மங்கலம் ஊராட்சியில் உள்ள எம்கேஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்டார்கள்.

இம்முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் அவர்கள் கலந்து

கொண்டு சிறப்புரையாற்றியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பெற்று 4 ஆண்டுகள்

ஆட்சி காலத்தில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை இந்தியாவிலேயே எந்த மாநிலமும்

செய்யாத அளவிற்கு சிறப்பான திட்டங்களை ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

என்ற அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மக்களின் தேவைகள் நிறைவேற்றிட

வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாநிலம் முழுவதும்

நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட

மங்கலம் ஊராட்சியில் உள்ள எம்கேஜி மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில்

பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்ற அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் பணியாற்றி

வருகிறார்கள். இந்த முகாம்களில் தூய்மை பணியாளர்களுக்கு துய்மை பணியாளர் நலவாரிய

அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நலவாரிய அட்டையின் மூலமாக

விபத்து இறப்புக்கு ரூ.5 இலட்சம், கை,கால் மற்றும் பார்வை இழப்போருக்கு ரூ.1 இலட்சம்,

ஏனைய காயங்களுக்கு ரூ.1 இலட்சம், இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20000, ஈமச்சடங்கு


உதவித்தொகை ரூ.5000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1000, திருமண உதவித்தொகை(2 முறை

மட்டும்) ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் பெண்களுக்கு ரூ.5000, மகப்பேரு உதவித்தொகை

ரூ.6000, கருச்சிதைவு மற்றும் கருகலைப்புக்கு ரூ. 3000 போன்ற உதவித்தொகைகள்

பெறுவதற்கான விண்ணப்பங்கள் இம்முகாமில் பதியபடுகின்றன. மேலும் இந்த முகாமில்

அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளித்து

பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் அவர்கள்

தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது

உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு

சான்றிதழ்களும், சாதி சான்றிதழ்,இருப்பிட சான்றிதழ்,மின் இணைப்புக்கான ஆணைகள்,

தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ

காப்பீட்டிற்கான அட்டைகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு

சட்டப்பேரவை துணைத்தலைவர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும்

வழங்கினார்கள்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன், துரிஞ்சாபுரம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%