வி.கே.லக்ஷ்மிநாராயணன்
ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
மொபைல் அடிக்க ஸ்கிரீனில் புருஷ னின் நம்பர் ! கை உதறலுடன்எடுத்து , " ஹலோ !" என்றாள் வசந்தி.
" என்ன வசந்தி கிளம்பல்லியா ? மணி ஆறாகப் போறது. இன்னும் கொஞ்ச நேரத்துல படம் போட்டுடுவான்.."
" ஸாரிங்க...." மென்று விழுங்கினாள்.
" பீரோ சாவிய காணோங்க !"
" என்னது ! பீரோ சாவிகாணல்லியா ?"
திடுக்கிட்டான் பிரபு. " நல்லா தேடிப் பார்த்தியா ?"
" தேடிக்கிட்டுதாங்க இருக்கேன்." குரல் பிசிரடித்து ஒலித்தது.
" சரி. நான் புறப்பட்டு வரேன் "
போனவாரம் ஒரு மாலில் இருந்த தியேட்டரில் புது தமிழ் படத்திற்கு இரண்டு டிக்கட் ரிசர்வ் செய்து வசந் தியிடம் கொடுத்திருந்தான் பிரபு. மாலை ஆறுமணி காட்சிபார்த்து விட்டு மாலில் உள்ள ரெஸ்டாரெ
ண்டில் இரவு டின்னரை முடித்துக் கொள்வதாக பிளான் ! ஆஃபிஸி லிருந்து தான் நேராக மாலுக்கு வருவதாக சொல்லியிருந்தான். வசந்தி டிக்கட்களை எடுத்துக்
கொண்டு மாலுக்கு வர ஏற்பாடு !
பைக்கை நிறுத்திவிட்டு அரக்க பரக்க வீட்டினுள் நுழைந்தான் பிரபு. புருஷ னைக் கண்டதும் பொங்கி வரும் கண்ணீருடன் எழுந்து நின்றாள் வசந்தி.
" நீங்க கொடுத்த டிக்கட்டை பீரோ லாக்கர்லதாங்க வச்சு பூட்டினேன். சாவியை ஒருமணி நேரமா தேடிக்கி ட்டிருக்கேன். கிடைக்க மாட்டேங்கு றது !" கேவலுடன் சொன்னாள்.
அவளை ஒருகணம் உற்று நோக்கி யவன் " சரி. நீ அழறத முதல்ல நிறுத்து. குடி ஒண்ணும் மூழ்கிப் போயிடல்ல...சரியா!"
நல்லவேளையாக கணவன் கோபப்படாமல் தன்மையாகப் பேசியது வசந்திக்குநிம்மதியைத் தந்தது.
தளர்வாய் சோபாவில் அமர்ந்தான் பிரபு. வசந்தியையும் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.
" வசந்தி ! நல்லா நியாபகப்படுத்திச் சொல்லு. பீரோவை எப்போகடைசியா பூட்டினே ?"
" நேத்து நீங்க கொடுத்த சம்பளப் பண
த்தை லாக்கர்ல வச்சு பூட்டினேன். அப்
போக்கூட சினிமா டிக்கட் பார்த்தேன்."
" சரி. அதுக்கப்புறம் சாவியை எங்கே
வச்சே. நியாபகம் இருக்கா ?"
".நம்ம பெட்ரூம் சுவத்தில வழக்கம் போல மாட்டுவேன். ஆனால் இன்னி க்குப் பார்த்தா காணல்லீங்க !" மீண் டும் அழுகை வரஅடக்கிக் கொண்டாள் வசந்தி.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு கைகளை தலைக்குப் பின்னால் வைத்தபடி யோசனை செய்தான் பிரபு.
இப்பொழுது வேறொரு கவலை பிரபுவைபற்றிக்கொண்டது. சினிமா டிக்கட் போனால் போகிறது. ஆனால் சம்பளப் பணம் பூராகவும் பீரோ லாக்கரில் இருக்கிறது.அவற்றைக் கொண்டு வீட்டு வாடகை, மளிகை , பால் , கேஸ் , பேப்பர்....இதெல்லாம் செட்டில் செய்யவேண்டும். சாவி
கிடைக்கவில்லையென்றால் பீரோவைஉடைக்கவேண்டியிருக்குமே.! மாமனார்கல்யாண சீர்வர்சையாகக் கொடுத்தது. நினைக்க நினைக்க மனசு அடித்துக் கொண்டது !
" வசந்தி ! எழுந்து என்னோட வா ! திரும்பவும் சாவியை தேடுவோம். "
பிரபுவும் வசந்தியும் முதலில் சமையலறைக்குள் நுழைந்தனர். பிரபு ஓவ்வொன்றாக அலச ஆரம்பி த்தான். முதலில் அரிசி டப்பாவை ஆராய்ந்தான். சாவி தென்பட
வில்லை. பிறகு புளி வைத்திருக்கும் பானை, பருப்பு டப்பாக்கள் , உப்பு ஜாடி எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது. எங்கும் சாவியைக் காணோம் .
அடுத்து படுக்கையறைக்குள் நுழைந்தனர். கட்டில் மேல் இருந்த தலையணை களைத் தூக்கிப் பார்த்தாகிவிட்டது.சாவி நஹி ! அறை மூலையில் ஓரு ஸ்டூல் மேல் வைத்தி ருந்த ஸூட்கேஸை தலைகீழாய் அலசிப் பார்த்தும் ஜூட் விட்டிருந்
தது சாவி. ஒரு சந்தேகத்தின்பேரில் டார்ச் லைட் அடித்து கட்டிலுக்குக் கீழேயும், மேலும் தரை பூராகவும் தேடிப்பார்த்ததில்ஒரு டஸ்ட் கூட இல்லாமல் துப்புரவாகக் காட்சிய ளித்தது தரை !
சட்டை, பேண்ட்டல்லாம் வேர்வைக் குளியலில் நனைந்திருந்தது !
" என்னங்க ! ரொம்ப டயர்டாயிட்டீங்க !
சூடா டீ போட்டுக் கொண்டு வரவா ?"
கேட்ட வசந்தியை முறைத்துப் பார்த்த
பிரபு , " உன்னோட மறதியினால இப்போ பீரோ சாவி எங்கே வச்சே ன்னு தெரியல்ல. இருக்குற எல்லா இடமும் தேடிப் பார்த்தாகி விட் டது..ஆனால் சாவியக் காணோம் !"
மீண்டும் வசந்தியின் கண்களில் நீர்.
தன் இயலாமையை நினைத்து வெறு
ப்பு தோன்றியது. புருஷன் நல்லவன்.
அதனால் மிகவும் பொறுமையாக செயல்படுகிறான்.இதே வேறு நபர் இருந்தால் இந்நேரம் தன் கன்னம் சிவந்திருக்கும். நெருப்பாக வார்த் தைகளைக் கொட்டியிருப்பர். வசந்தி யின் மனம் அடித்துக் கொண்டது.!
மீண்டும் சோபாவில் தளர்வாய் அமர்ந்து கொண்டான் பிரபு. ஏதோ யோசனையாக பீரோவைப் பார்த்த வன் எழுந்து பீரோ அருகில் சென் றான். அதன் கைப்படியில்கை வைக்க அது கீழ் நோக்கி இறங்கியது. கதவைத் திறந்து பார்த்தான். லாக்
கரில் ' ஜம்மென்று ' சாவி தொங்கிக்
கொண்டிருந்தது !
..........................................