மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற உடனே விண்ணப்பீங்க..!

மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற உடனே விண்ணப்பீங்க..!


தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோரை வயதான காலத்தில் பாதுகாக்க தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகையை வழங்கி வருகிறது. இதுவரை ஆண்டுக்கு 100 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த உதவித்தொகை, நடப்பாண்டு முதல் 150 பேருக்கு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது.


இதன்படி வயதான காலத்தில் தமிழறிஞர்கள் வறுமையில் வாடாமல் இருக்க ரூ.7,500 உதவித்தொகை மற்றும் ரூ.500 மருத்துவப்படி சேர்த்து மொத்தம் ரூ.8,000 வழங்கப்படும்.


வயதான தமிழ்ச் சான்றோர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களின் மனைவி, விதவை மகள் அல்லது திருமணமாகாத மகளுக்கு வாழ்நாள் முழுக்க மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை சட்டசபையில் நடைபெற்றது.


அப்போது வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இனி 150 பேருக்கு வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் இதற்காக கூடுதலாக ரூ.48 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் http://tamilvalarchithurai.org/agavai என்ற இணைய தளத்தின் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கும் தமிழறிஞர்கள் 58 வயது நிரம்பியிருக்க வேண்டியது அவசியம். அதோடு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இதையும் படியுங்கள்:

விபத்தில் சிக்கிய கால்நடைகளை மருத்துவமனையில் சேர்த்தால் உதவித்தொகை..!

Scholarship for Tamil Poet's

விண்ணப்பத்தின் போது தமிழப் பணி ஆற்றியதற்கான சான்றுகள் மற்றும் 2 தமிழ் அறிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரைச் சான்றிதழை இணைத்தல் வேண்டும். இதுதவிர ரேஷன் கார்டு நகல் மற்றும் ஆதார் அட்டை நகலையும் இணைக்க வேண்டும்.


விண்ணப்பப் படிவத்தை மண்டல / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை அல்லது உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக அலுவலகத்திலோ அல்லது tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளத்திலோ சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17-11-2025.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%