இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த அமைச்சர் ஒருவர்..
"உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
அமைச்சர் குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் மேடம்" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே கேட்டார்,
"டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல.. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் " என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் அமைச்சர் பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.
அமைச்சர் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்காெண்டு மீண்டும் தாயகம் வந்தவுடன் துணை அமைச்சரை கேட்டார், "உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" எனற துணை அமைச்சர் அடிமைகள் அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் சந்திரபாபு நாயுடுவிடம் ஓடி,
"நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
சந்திர பாபு "அது நான்தான்!" என்றார்.
பதில் தெரிந்து கொண்ட துணை அமைச்சர் ஓடிவந்து அமைச்சரிடம் "எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு" என்றார் அமைச்சர்
"சந்திரபாபு நாயுடு தான் அது" என்றார் துணை அமைச்சர்.
அமைச்சர் அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார், "முட்டாள் அது டேவிட் கேமரூன்டா"...
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?