முதல்வர் என் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார்” - நயினார் வழங்கிய நற்சான்று

முதல்வர் என் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார்” - நயினார் வழங்கிய நற்சான்று


முதலமைச்​சர் என் தொகு​திக்கு பாலம், ரோடு, கல்​லூரி என நிறைய நன்​மை​களைச் செய்​துள்​ளார். அதே​போல் மக்​களுக்​கும் பொங்​கல் பரி​சாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.


இது தொடர்​பாக நேற்று திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: நான் யாரை​யும் சந்​திப்​ப​தற்​காக டெல்லி செல்​ல​வில்​லை. அது என்​னுடைய சொந்​தப் பயணம். முந்தா நாள் மதி​யம் சென்​று​விட்டு நேற்று காலை​யில் திரும்​பி​விட்​டேன். இதில் அரசி​யல் உள்​நோக்​கம் எது​வும் இல்​லை. செங்​கோட்​டையன் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகத்​தில் இணைந்​திருப்​ப​தால் அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்கு எந்​தப் பின்​னடை​வும் இல்​லை.


செங்​கோட்​டையன் 1977 முதல், 50 ஆண்​டு​களாக அரசி​யலில் இருக்​கும் மூத்த தலை​வர். எம்​ஜிஆர், ஜெயலலிதா மற்​றும் எடப்​பாடி பழனி​சாமி ஆகியோரின் அமைச்​சர​வை​யில் பணி​யாற்​றிய​வர். அதி​முக-வை பொறுத்​தவரை அதற்​கென தனி வாக்கு வங்கி உள்​ளது. ஒரு தலை​வர் வில​கிச் செல்​வ​தால் அந்த வாக்கு வங்கி அப்​படியே அவருடன் செல்​லுமா என்​பது கேள்விக்​குறி​தான். தேர்​தலுக்​குப் பின்​னரே அதன் தாக்​கம் தெரி​யும்.


தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் 2026-ல் கூட்​டணி ஆட்சி அமை​யும் எனக் கூறி உள்​ளார். கருத்​துச் சொல்ல அனை​வருக்​கும் உரிமை உண்​டு. ஆனால், எஜமானர்​களான வாக்​காளர்​களே அதை முடிவு செய்​வார்​கள். 2006-ல் திமுக மைனாரிட்டி அரசை அமைத்​ததைத் தவிர, தமிழக வரலாற்​றில் தனிப்​பெரும்​பான்மை கொண்ட ஆட்​சி​யைத்​தான் மக்​கள் தேர்வு செய்​துள்​ளனர்.


திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு சொத்​து​வரி மற்​றும் மின்​கட்​ட​ணத்தை 300 சதவீதம் உயர்த்​தி​யுள்​ளது. சொன்ன வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்​ற​வில்​லை. ஆனால், பொங்​கல் பண்​டிகை வரவுள்ள நிலை​யில், கடந்த முறை ஆயிரம் ரூபாய் கொடுத்​தார்​கள். இந்த முறை மக்​கள் ரூ.5 ஆயிரம் எதிர்​பார்க்​கிறார்​கள்.


முதலமைச்​சர் என் தொகு​திக்கு பாலம், ரோடு, கல்​லூரி என நிறைய நன்​மை​களைச் செய்​துள்​ளார். அதே​போல் மக்​களுக்​கும் பொங்​கல் பரி​சாக ரூ.5000 வழங்க வேண்​டும் என்று நானும் கேட்​டுக்​கொள்​கிறேன். மக்​கள் இந்த அரசால் லட்ச ரூபாய் வரைக்​கும் நஷ்டத்​தில் இருக்​கை​யில், வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்​தால் ஓட்​டுப் போடு​வார்​களா என்​பது சந்​தேகமே.


உலகின் மிகப்பெரிய கட்சி: பாஜக சுமார் 1,600-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏ-க்​கள், 300-க்​கும் மேற்​பட்ட எம்​பி-க்​களைக் கொண்ட உலகின் மிகப்​பெரிய கட்​சி. தம்பி விஜய் இப்​போது​தான் கட்சி ஆரம்​பித்​திருக்​கிறார். அவர் இன்​னும் ஒரு கவுன்​சிலர் கூட ஆகவில்​லை. அப்​படிப்​பட்​ட​வர், எடுத்​தவுடனேயே லாங் ஜம்ப் செய்து உலகத்​தையே தாண்​டு​வேன் என்று சொல்​வது சரி​யாக இருக்​காது. தேர்​தலில் நின்று தன் பலத்தை நிரூபித்த பிறகு பேசலாம். எம்​ஜிஆர் கட்சி ஆரம்​பிக்​கும் முன்பே எம்​எல்​ஏ-​வாக​வும், திமுக-​வின் முக​மாக​வும் இருந்​தார். ஆனால் விஜய் இப்​போது நடிக​ராக மட்​டுமே உள்​ளார்.


பாஜகவுக்கே வந்திருக்கலாமே.. அதி​முக-​வில் இருந்​து​கொண்டு பாஜக-வை நம்​பினோம் என்று செங்​கோட்​டையன் சொல்​வது எப்​படிப் பொருத்​த​மாக இருக்​கும்? செங்​கோட்​டையன் தவெக-​வில் இணைந்​ததன் பின்​னணி​யில் பாஜக இருப்​ப​தாகத் திரு​மாவளவன் சொல்​வது தவறானது. பாஜக பின்​னணி​யில் இருந்​தால் அவர் ஏன் தவெக-வுக்​குச் செல்ல வேண்​டும்; பாஜக-வுக்கே வந்​திருக்​கலாமே.


பழனி​சாமி​யின் போக்கு காரண​மாகவே நிர்​வாகி​கள் வெளி​யேறு கிறார்​களா என்று கேட்​கிறீர்​கள். அடுத்த கட்​சிகளின் உள்​கட்சி விவ​காரங்​கள் குறித்து பேசுவது நாகரி​க​மாக இருக்​காது. டிடி​வி. தினகரன் கூறியது போல் மூன்​றாவது அணி அமைந்​தா​லும், நான்​காவது அணி அமைந்​தா​லும், 2026-ல் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​தான்​ ஆட்​சி​யைப்​ பிடிக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%