
ஹராரே,
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது .தொடக்கம் முதல் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது . அந்த அணியின் பதும் நிசாங்கா, குஷால் மெண்டிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர் .குஷால் மெண்டிஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார் .
மறுபுறம் அரைசதமடித்து பதும் நிசாங்கா 55 ரன்களில் வெளியேறினார் . தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 177 ரன்கள் எடுத்தது . இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?