முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி


அன்பின் முற்றுப்புள்ளி 

கருவறையின் தொடக்கம்


சின்னத் துகள்களின் நிறைவில்

சிங்காரமாய் முழுமையடையும்


தேவையற்ற தொடர்ச்சிக்குத்

தேடி வந்து

தடை போடும்

தொடர்ந்து இணை சேர்த்து கோலமாக்கி அழகு பார்க்கும்


நிறைவையும் நிறைவு செய்து

 அழகு பார்க்கும் 


பொருளின் முழுமையைப் பொருத்தமாகக் காட்டி வரும் 


கோட்டுக்கு ஆதாரமாகும்


வாழ்வின் முற்றுப்புள்ளி 

வாழ்க்கைக்கு வழி காட்டும்


தேவையற்ற உறவுகளுக்குத் தேவை முற்றுப்புள்ளி 


    வாசலில் முற்றுப்புள்ளி 

வண்ணமிகு கோலம்

உறவின் முற்றுப்புள்ளி 

வார்த்தைகளின் தீவிரம்


தீர்ப்பின் முற்றுப்புள்ளி 

நீதியின் சாட்சி


கவிதையின் முற்றுப்புள்ளி 

கற்பனையின் நீட்சி


கதையின் முற்றுப்புள்ளி 

கருவின் மாட்சி


உழைப்பின் முற்றுப்புள்ளி 

ஊதியத்தின் பெயர்ச்சி 


வாழ்வின் முற்றுப்புள்ளி 

கல்லறையின் முடிவு.



தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%