மூன்றெழுத்தில் அப்பா

மூன்றெழுத்தில் அப்பா



  " குழந்தைகளிடம்

     விளையாட 

     நேரமில்லை அப்பா .... "


     அப்பா விளையாட

     வரும் போது

     குழந்தைகள்

     உறக்கத்தில் ..."


     அப்பாவின்

     வேலை பளு

     பிஞ்சுகளுக்கு

     தெரிவதில்லை

     புரிவதில்லை ..."


     அப்பாவின் ஏக்கம்

     எல்லாம் கனவில்

     மட்டும் தான்

     என்பது குழந்தைகளுக்கு

     புரிவதில்லை ..."


     அம்மாவின் 

     தாலாட்டும்

     அனைப்பும்

     பாசமும்

     நுகரும்

     பிள்ளைகள் .... "


      அப்பாவின்

      அடிமனம்

      வெளிமனம்

      ஆசை ஆனந்தம்

      எல்லாம்

      பிள்ளைகளே ..."


      பிள்ளையின் கல்வி

      வீட்டின் சேமிப்பு

      மனைவியின் தேவை

      எதிர்காலம் ....."


       ஓடி ஓடி

       உழைத்து பணம்

       சேர்த்து ஒவ்வொரு

       தேவையும் பூர்த்தி

       ஆகும் வேளையில் ...."


       அப்பா பெறும்

       மன நிறைவு

       வெளியில் தெரியாத

       ரகசியம் ...."


       இருந்தும் தூங்கும்

       வேளையில்

       தலையை வருடி

       உச்சி முகர்ந்து

       குழந்தைகளை

       ரசிக்கும் அப்பா

       அந்தக் குடும்பத்தின்

       வரமே மணமே ....."


   - சீர்காழி .ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%