மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபருக்கு கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார். அவர் மெக்சிகோ சிட்டி நகரில் நடந்து குறைந்த அளவிலான பாதுகாவலர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர்களுடன் புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அவரை நெருங்கிய வாலிபர் ஒருவர் உடன் இணைந்து போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவருடைய தோள்பட்டை மேல் கையை போட்டதும் இன்றி சட்டென தகாத முறையில் தொட்டு முத்தமிட முயன்றார்.
சுதாரித்து கொண்ட கிளாடியா அந்த வாலிபரிடம் இருந்து உடனடியாக விலகினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மெக்சிகோவில் பெண் அதிபருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகில் முதல்முறை! ரூ.88 லட்சம் கோடி ஊதியம் பெறும் எலான் மஸ்க்!
உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 சதவிகித பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்துக்கு எலான் மஸ்க் முன்வைத்துள்ள தொழில்நுட்ப இலக்குகளை அடைவதற்கும், அவர் டெஸ்லாவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், இந்த ஊதியத்தை வழங்க பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்கிற்கு ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வழங்கப்பட அவரது தலைமையில் டெஸ்லா நிறுவனம் அடையவேண்டிய தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இலக்குகளை முன்வைத்து ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி டெஸ்லா வாகனங்கள் உருவாக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது, கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்லா நிறுவனம் தயாரித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.
இத்துடன், டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டுமெனவும், அவரது தலைமையிலான டெஸ்லா நிறுவனம் சுமார் 10 லட்சம் ரோபோக்களை தயாரித்து விநியோகிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் முதல் டிரில்லியன் பணக்காரராக உருவாகும் வாய்ப்பு எலான் மஸ்கிற்கு கிடைத்துள்ளது.
முன்னதாக, எலான் மஸ்கிற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியம் வழங்குவதை எதிர்த்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.