மெட்ரோ ரெயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்

மெட்ரோ ரெயிலில் பிச்சை எடுத்த நபருக்கு ரூ.500 அபராதம்



பெங்களூரு,


உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு விளங்கினாலும், பெங்களூரு மாநகரில் இன்றளவும் பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது பிச்சைக்காரர்கள் மெட்ரோ ரெயிலிலும் புகுந்துவிட்டனர்.

மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் அழுக்கு உடையில் செல்ல முடியாது என்பதால் இங்கு ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து, மெட்ரோ ரெயிலில் பயணித்து பயணிகளிடம் யாசகம் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

டிப்-டாப் உடையில் பயணி போல் மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து யஷ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்த அந்த நபர், ரெயில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார்.‘நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி, எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கூறி துண்டு சீட்டை பயணிகளிடம் கொடுத்து, அதன்மூலம் அவர் யாசம் பெற்றார்.

இதைக்கண்ட மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையே இதை மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%