மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் 60 கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்: மக்கள் குதூகலம், கண்டுகளித்தனர்

மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் 60 கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்: மக்கள் குதூகலம், கண்டுகளித்தனர்

சென்னை, செப் 22–


இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில், இங்கு வரும் மக்களின் மகிழ்விற்காகவும், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், இந்த கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நேற்று (21–ந் தேதி) சிறப்பாக நடைபெற்றது.


இந்த கலை நிகழ்ச்சியில், கலை வளர்மணி பன்னீர் ராஜன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகம், காளை, மயில் ஆட்டங்களும், தீபன் குழுவினரின் பறையாட்டம் கலை நிகழ்ச்சியும், தருமபுரி சிவக்குமார் குழுவினரின் பம்பை, சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சியும், கலப்பை குழுவினரின் களியாட்டம் மற்றும் சாட்டைக் குச்சியாட்டம் கலை நிகழ்ச்சியும், எல்லையில்லா கலைக்குழு நியூட்டன் துடும்பாட்டம் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.


இந்த கலை நிகழ்ச்சிகளில் 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 3 மணி நேரம் மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%