மேட்டுப்பாளையத்தில் கேலோ இந்தியா மகளிருக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி
Dec 29 2025
13
கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கேலோ இந்தியா மகளிர்க்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் துவக்க விழாவில் சூரியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுதாகர் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் முதல்வர் சுகுணா, சூரியா மருத்துவமனை பெண்கள் நல மருத்துவர் புவிதா சுதாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடைபெற்றன. இறுதி போட்டியில் நாமக்கல் அணியும், கன்னியாகுமரி அணியும் விளையாடின.
இதில் நாமக்கல் அணி வெற்றிபெற்று முதலிடத்தினையும், கன்னியாகுமரி அணி இரண்டாமிடமும் பெற்றனர். மூன்றாம் இடத்தினை ராணிப்பேட்டை அணியும், வேலூர் அணியும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற வீரங்கனைகளுக்கு நீலகிரி மாவட்டம் பைக்காரா மண்டலம் வன அதிகாரி மஞ்சு தாஷினி, கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவர் சுதாகர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக செயலாளர் ஞானவேல், பொருளாளர் கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?