மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் திட்டமான கேலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக விளையாட்டுப் போட்டிகள்
Nov 24 2025
10
விளையாட்டுத் துறையில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் திட்டமான கேலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டமான கோலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா மூவ்மெண்ட் ஸ்போர்ட்ஸ் மகோத்சவ் சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டின் பேரில் இறகு பந்து போட்டிகள் மேட்டுப்பாளையம் சிவன் புரம் தனியார் பேட்மின்டன் அகாடமியில் தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா கட்சி மாநில செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கரு.மாரியம்மன் வரவேற்று பேசினார். மாநில அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டி.விஜயகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், என்ஜிஓ மாநில இணை அமைப்பாளர் சங்கீதா, மாவட்ட பொது செயலாளர்கள் விக்னேஷ், பிரியதர்ஷினி மாவட்ட செயலாளர்கள் உமாசங்கர், சுவாமிநாதன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஸ்ரீஜா நன்றி கூறினார். அதன் பின்னர் 15 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை டாக்டர் டி.விஜயகிரி தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?