யூரியா உரத்துடன் இணை பொருட்களை சேர்த்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்: சிவகங்கை கலெக்டர் பொற்கொடி எச்சரிக்கை
சிவகங்கை, நவ.3–
யூரியா உரத்துடன் இணை பொருட்களை சேர்த்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் -என சிவகங்கை கலெக்டர் கா.பொற்கொடி எச்சரித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெய்த பருவ மழையின் காரணமாக அனைத்து வட்டாரங்களிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிர்கள் உரமிடும் நிலையை எட்டியுள்ளது. விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைத்து, விநியோகம் செய்திட உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் தேவையான உரங்களை வாங்கி பயன்பெறும் வகையில் யூரியா 1754 மெட்ரிக் டன்களும், டிஏபி 1443 மெட்ரிக் டன்களும், பொட்டாஸ் 578 மெட்ரிக் டன்களும், காம்ளக்ஸ் 2329 மெட்ரிக் டன்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு விற்க கூடாது
மேலும், உரங்கள் விநியோகம் செய்யும் உர உற்பத்தி நிறுவனங்கள் இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே விற்பனையாளர்களுக்கு யூரியா உரம் வழங்குவதாகவும், இவ்வாறாக பெறப்பட்ட யூரியா உரத்தினை சில்லரை உர விற்பனையாளர்கள், விவசாயிகளிடம் இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா உரம் வழங்கப்படும் என கட்டாய படுத்துவது மட்டுமன்றி கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வதாகவும் புகார்கள் வரப்பெறுகின்றன. இப்புகார்களானது, இது அத்தியாவசிய பொருள் சட்டத்தினை மீறிய செயலாகும்.
குறிப்பிட்டுள்ள செயல்கள் தொடர்பாக மேலும் புகார்கள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட உர விற்பனையாளரின் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும், கட்டாயப்படுத்தும் உர உற்பத்தி நிறுவனங்கள் மீது மேல்நடவடிக்கை தொடர வேளாண்மை இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?