ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது

ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்கள் எடுத்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். ரயில் நிலையம் அருகே கஞ்சா கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ் மற்றும் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் விழுப்புரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த காதர் உசேன் (24) என்பது தெரிய வந்தது.அவரிடமிருந்த 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


மது கடத்தியவர் கைது


விழுப்புரம், நவ.25 – விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே பள்ளிச் சீருடையில் குழந்தைகளைப் பயன்படுத்தி, புதுச்சேரி மதுபானத்தை நூதன முறையில் கடத்தி வந்த பரத் என்கிற பர்வீன் (30) என்பவரை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 316 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%