ரஷ்யாவில் முதலீடு செய்ய பைடன் விதித்த தடைகளை கட்டாயம் நீக்க வேண்டும்: அமெரிக்க முதலாளிகள் விருப்பம்
Sep 19 2025
42

நியூயார்க்,செப்.17- ஜோபைடன் ஜனாதிபதியாக இருந்த போது ரஷ்யாவில் முதலீடு செய்யக் கூடாது என விதித்த தடைகளை டிரம்ப் நீக்க வேண்டும் என அமெரிக்க பெருமுதலாளிகளில் ஒரு பிரிவி னர் வெளிப்படையாகவே விருப்பம் தெரி வித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான ராபர்ட் ஏஜி தனது பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்க ளுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விதித்த முதலீட்டுத் தடைதான். இது மீண்டும் ரஷ்யாவில் முதலீடு செய்ய விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ரஷ்யாவிலேயே இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் தடையாக உள்ளது. அமெரிக்க நிறு வனங்கள் மீண்டும் ரஷ்யாவில் முதலீடு செய்யவும், தொழில் நடத்தவும் இந்தத் தடையை கட்டாயம் நீக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை என்று அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவை ஒரு நம்பிக்கைக்குரிய சந்தையாகவே பார்க்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். 2022 இல் உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்த பிறகு பைடன் நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு நிர்வாக உத்தரவின்படி அமெரிக்கர்கள் ரஷ்யா வில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டது. இத னால் அமெரிக்காவில் உள்ள முதலாளிகளில் ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை யின் ஒரு பகுதியாக ரஷ்யாவுடன் வணிக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் துவங்கும் முயற்சி யையும் முன்னெடுத்தார். இதனை ஆக்கப்பூர்வ மாக பார்ப்பதாகவும் ராபர்ட் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மீதான பைடனின் தடைகள் அந் நாட்டின் பொருளாதாரத்தை முடக்க தவறிவிட்டது. மாறாக ஆசிய நாடுகளை நோக்கி ரஷ்யாவின் சந்தையையும் பொருளாதாரத்தையும் விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?