ராஜஸ்தான்: 55வது வயதில் 17வது குழந்தையை பெற்ற பெண்

ராஜஸ்தான்: 55வது வயதில் 17வது குழந்தையை பெற்ற பெண்

ஜெய்ப்பூர்,


ராஜஸ்தான் மாநிலம் உதம்பூர் மாவட்டம் லிலாவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் கவர ராம் கல்பெலியா. இவரது மனைவி ரேகா (வயது 55). கவர ராம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.


கவர ராமின் மனைவி ரேகா ஏற்கனவே 16 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.


இந்நிலையில், ரேகா நேற்று 17வது குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவெ பிரசவத்தின்போது ரேகாவிற்கு 6 குழந்தைகள் (ஒரு பெண் குழந்தை உள்பட) உயிரிழந்துவிட்டன. எஞ்சிய 11 பிள்ளைகளுடன் ரேகா , கவர ராம் தம்பதி வாழ்ந்து வந்தனர். தற்போது ரேகாவுக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது.


இது தனக்கு 4வது குழந்தை என பொய்யாக கூறி ரேகா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு பிரசவம் பார்த்த பின்னரே இது அவரின் 17வது குழந்தை என மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகவும் ஆனால் தொடர்ச்சியான கர்ப்பத்தால் ரேகாவின் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனக்கு பிறந்த பிள்ளைகள் யாரையும் கவர ராம் கல்வி படிக்க வைக்கவில்லை.


அதேவேளை, ரேகாவின் பிள்ளைகளில் 2 மகன்கள், 3 மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி அவர்களுக்கும் குழந்தை உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%