ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி

ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி:

ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “என்னுடைய மைத்துனரை கடந்த 10 வருடங்களாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. இந்த புதிய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும்.


ராபர்ட், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் எப்படிப்பட்ட துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். அந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். இறுதியில் உண்மை வெல்லும்" என தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: குரு​கி​ராம் நில விற்​பனை மோசடியில் கறுப்​பு பணம் பயன்​படுத்தப்பட்டுள்ளது. அப்​போதைய காங்​கிரஸ் அரசு, ராபர்ட் வதே​ரா​வுக்கு சாதகமாக செயல்​பட்டிருப்​பது வெட்​ட​வெளிச்​ச​மாகி இருக்​கிறது. வதே​ரா பரிந்துரை செய்த​படி, ஹரியானாவில் பல ஏக்​கர் நிலத்தை டிஎல்​எஃப் நிறுவனத்​துக்கு முந்​தைய காங்​கிரஸ் அரசு ஒதுக்கியுள்​ளது. இதன்​மூலம் டிஎல்எஃப் நிறுவனம் ஆதா​யம் அடைந்துள்ளது.


டிஎல்​எஃப் மற்​றும் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பி​டா​லிட்டி நிறு​வனம் இடையே நடை​பெற்ற பண பரி​மாற்றங்கள் குறித்து தீவிர​மாக விசா​ரணை நடத்தி வரு​கிறோம். பண மோசடி, முறை​கேடு​கள் தொடர்​பாக பல்​வேறு முக்கிய ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன. இவற்​றின் அடிப்​படை​யில் நீதிமன்றத்தில் குற்​றப் பத்​திரிகை தாக்கல் செய்​யப்​பட்டுள்​ளது.


ஆயுத தரகர் சஞ்​சய் பண்​டாரி, பிரிட்​டிஷ் தலைநகர் லண்​டனில் ஒரு சொகுசு வீடு வாங்​கி​னார். இந்த வீட்டை கடந்த 2010-ல் ராபர்ட் வதே​ரா​வுக்கு விற்​பனை செய்​தார். இது ஒரு வகை​யான லஞ்​சம். இது தொடர்​பாக​வும் வதேரா மீது டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடந்து வருகிறது.


கடந்த 2010-ல் ராஜஸ்​தானின் பிகானேரில் 31.61 ஹெக்​டேர் நிலத்தை வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பி​டா​லிட்டி நிறுவனம் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. அப்​போதைய ராஜஸ்​தான் மாநில காங்​கிரஸ் அரசு வதே​ரா​வுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது. இதுதொடர்​பாக​வும் டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு வி​சா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%