ரூ.1248 கோடியில் 10 சாலைகள், 2 சாலை மேம்பாலங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ.1–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1177 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 272 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் 30.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்ட கோபி – ஈரோடு சாலை;
மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 221 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் 10 மீட்டர் அகல இருவழிச்சாலையாக, 16.425 கி.மீ நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலை;
4 வழிச்சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் 111 கோடி ரூபாய் செலவில் 11.40 கி.மீ நீளத்திற்கு இரு வழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கொரட்டூர் – தின்னனூர் – பெரியபாளையம் சாலை மற்றும் 82 கோடி ரூபாய் செலவில் 9.20 கி.மீ நீளத்திற்கு இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட திருவள்ளூர் – அரக்கோணம் சாலை;
திருநெல்வேலி மாவட்டத்தில் 65 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை;
அரியலூர் மாவட்டத்தில் 60 கோடி ரூபாய் செலவில் (கி.மீ 6/8-14/8) 8.0 கி.மீ நீளத்திற்கும், 62 கோடி ரூபாய் செலவில் 6.20 கி.மீ நீளத்திற்கும் மற்றும் 63 கோடி ரூபாய் செலவில் 6.60 கி.மீ நீளத்திற்கும் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலை;
வேலூர் மாவட்டத்தில் மேலாலத்தூர் – வளத்தூர் இரயில் நிலையங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;
லட்சுமி அம்மாள்புரம் – நாவிதம்பட்டி சாலையில் மேல்பட்டி – வளத்தூர் இரயில் நிலையங்களுக்கிடையே 35 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் உட்பட மொத்தம் 1248 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் இரு சாலை மேம்பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு. முத்துசாமி, எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.