லடாக்கில் தொடரும் ஊரடங்கு: வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு

லடாக்கில் தொடரும் ஊரடங்கு: வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு

லே, செப். 25–


லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். அங்கு 2வது நாளாக இன்றும் ஊரடங்கு தொடர்கிறது. பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக லடாக் மக்​கள் தங்​கள் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் நிலம், கலாச்​சா​ரம் மற்​றும் வளங்​களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரி வரு​கின்​றனர். ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலர் சோனம் வாங்சுக் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, கோரிக்கைகள் தொடர்பாக தலைநகர் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.


போலீசாரின் வாகனத்துக்கு தீ வைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனா். 80க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.


வன்முறையைத் தொடர்ந்து லே மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..


லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. நேற்று மாலை 4 மணிக்கு மேல் எவ்வித போராட்டமும் நடைபெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், பழைய காணொலிகள் மற்றும் போராட்டத்தை தூண்டும் காணொலிகளை சமூக ஊடகங்களில் யாரும் பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%