லயன்ஸ் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கல்
Sep 21 2025
103
தஞ்சாவூர், செப். 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. இதனை, சங்க உறுப்பினர் வி. சிவலிங்கம் அன்பளிப்பாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு, சங்கச் செயலாளர் ஜி.பிரதீஸ் தலைமை வகித்தார். கீரமங்கலம் பேரூராட்சி பெருந்தலைவர் சிவக்குமார், சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், சாசனத்தலைவர் எம்.நீலகண்டன், மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், கவுன்சிலர்கள் சித்ரா சகாயம், ஞானராஜ், நிர்வாக அலுவலர் ஜி.ராஜசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சுப.பெரியசாமி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் பி.ஆர். சாந்தி வரவேற்றார். பள்ளி ஆசிரியை எஸ்.விஜி நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?