வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு
Jan 08 2026
14
சென்னை: 'வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் கனமழை துவங்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இது நேற்று முன்தினம் மாலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவிய இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை மறுநாள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்காக, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவ கங்கை, திருச்சி, அரியலுார், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மா வட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச் சேரியிலும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 10, 11ம் தேதிகளிலும், தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், வரும் 10 வரை பலத்த சூறாவளி வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?