-----------------------
காதலியே!
புருவவில்லில்
நாணேற்றி விழிஅம்புகளால்
நீ தாக்கியதில்
வெறுமையாய் இருந்த
இதயத்தில் வானவில் நாணேற்றி மன்மத அம்புகளைத்
தொடுப்பதாய்க்
கனவுகள் திரைச்சீலையாய் விரிகின்றன!
உன்னைப்பார்த்துக்
கொண்டிருப்பதே
மகிழ்ச்சியின் எல்லை
அருவியைத்தழுவிச்
செல்லும் தென்றலாய்க்
கடந்துச்செல்கிறாய்!
பகலின் தெளிவும்
இரவின் சுகமும் கலந்த
உன் பேச்சில்
நதியின் நளினமும்
நன்செய் நிலத்தின்
பசுமையும் பளிச்சிடுகிறது!
வசந்தத்தின் முத்திரையாய் உன்
பனிமுத்தம் கிட்டும்வரை மழையில்
நனைந்து சிலுசிலுக்கும்
நீ வளர்த்த ரோஜாவை
கன்னத்தில் ஒத்திக்கொள்கிறேன்!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%