வஞ்சகிக்கு வாழ்த்து !

வஞ்சகிக்கு வாழ்த்து !



வி,கே.லக்ஷ்மிநாராயணன்

22, 22 ஏ,ராமகிருஷ்ணா 

ராமகிருஷ்ணா நகர் 

போருர், சென்னை 600 116 


                       

உருகினேன் ஐஸ்க்ரீமாய் 

உன் பசப்பு 

வார்த்தைகளை 

நம்பியபோது !

கரைந்தேன்

 இனிக்கும் வெல்லமாய் 

நீ என்னிடம் 

பழகியதை கண்டபோது! !

நடிப்பில் உனை மிஞ்ச

 ஆள் இல்லை 

என்பது தெரிந்தது  

உன் வெளி வேஷம் 

அப்பட்டமாய் 

வெளிப்பட்டபோது! !

மறுகினேன் 

நீ அப்படி இருந்தது கண்டு ! 

புரிந்தது எனை விட்டு

 ஒரேயடியாய் 

நீ தலை முழுகிச்

 செல்வாய் என்று !   

நடத்திக் காட்டினாய் 

அதையும் ஒரு நாள் நீ !  

எதற்காக இந்த நாடகம் 

விளங்கவில்லை எனக்கு ! 

ஆயினும் வாழ்த்துகிறேன் 

கண்ணே நீ

 எங்கிருந்தாலும் நலமாக இரு !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%