வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா
Sep 18 2025
40

சியோல்,
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை, அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை தூண்டுகின்றது. இதனை சமாளிக்க தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நடத்தக்கூடாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த பயிற்சி அவசியம் என தென்கொரியா கருதுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டுப்போர் பயிற்சி தென்கொரியாவின் ஜெஜு தீவில் தொடங்கியது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடைபெறும் இந்த பயிற்சி வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கடல், வான் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் நடத்தப்படும் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த பயிற்சி தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?