வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் உலக எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நிலைய மருத்துவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் பீ.ரகமத்துல்லா, சி.காசி, சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.தமீன்கான் பங்கேற்று, எய்ட்ஸ் விழிப்புணர்வு தகவல்களை விளக்கினார். மேலும் ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் பெ.பார்த்திபன், கு.சதானந்தன் , பிடிஜி ஆறுமுகம், அ. ஷாகுல் அமீது, எக்ஸ்னோரா நிர்வாகிகள் மலர் சாதிக், சு.தனசேகரன், மருந்தாளுநர் சற்குணம், மணிகண்டன், சமூக ஆர்வலர் ஜியா உள்ளிட்ட புறநோயாளிகள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக எயிட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் தலைமை செவிலியர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News