வந்து பிறந்து விட்டேன்!

வந்து பிறந்து விட்டேன்!


இந்த தாய் வயிற்றில்

இந்த தந்தை வழி..

இந்த மண்ணுலகில் 

வந்து பிறந்து விட்டேன்!

வாழத் தெரியவில்லை!


கன்று துள்ளுதல்போல்

அன்று துள்ளி வந்தேன்

நின்று நிலமெல்லாம்

சென்று நடை பயின்றேன்!

பந்து போல எங்கும்

பாய்ந்து திரிந்திருந்தேன்!

என்றும் இப்படியே செல்வேன் என்றிருந்தேன்.!


கண்கள் சென்றவழி என் கால்கள் நடந்ததுவும்.. பொங்கும் இளமையிலே சிறகு முளைத்ததுவும்.. அங்கும் இங்குமென ஒரு அங்காடி நாயெனவே.. எங்கும் சென்ற பின்னே.. இங்கு வந்து விட்டேன்!


காசு நிற்கவில்லை.. பாசம் ஏதுமில்லை.. வேசம் இட்டதனால் மேடைக் குறைவுயில்லை.. நேசம் மறக்கவில்லை.. நெஞ்சம் இன்று இல்லை..!


ஓடிக் கிடந்த காலம்.. ஓய்வைத் தேடும் கால்கள்.. கூடிக் கிடந்தப் பருவம்.. குழந்தை வடிவெடுக்க.. இனி.. நாடிப் போய்ச் சேர.. நாட்களை தேடும் வாழ்வு.!


ஒற்றையாய் பிறப்பு.. ஒன்று கூடி வாழந்த நினைப்பு.. அற்றைத் திங்கள் மீண்டும் அந்த நிலா எங்கே? கற்றை வினாக்கள் உண்டு.. கடைத்தேற வழிதான் எங்கே?


எதுவரை வாழ்வதெனினும்.. இருக்கிற பொழுதுகளில்.. மனதுக்கு அமைதி தேடும் ஓர்.. மனிதனாய் இங்கு வந்து பிறந்து விட்டேன்..! வாழத் தெரியவில்லை!


வே.கல்யாண்குமார்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%