🌾 🌾
பசுமைப் போர்த்திய வயலில்
விடியத் தொடங்கிய வானிலிருந்து
மூடுபனியின் துளிச் சாரல்
முத்துக்களாய் மின்ன...
தென்றல் பாடியப் பாட்டில்
மெதுவாய் நெல் அலைகள்
மனதைத் தழுவி தாலாட்ட
மண்ணின் மணம்
மனம் தழுவியது.
கோழியின் கூவலில் விழிக்கும்
கிராமம் ...
உச்சியில் கதிரவன் எழும்ப...
தங்கப் பட்டு போர்த்திய
வயல்வெளிகள் புன்னகைத்தன.
பாதை ஓரத்தில்
பழைய ஆலமர நிழலில்
தீண்டாமல் கிடந்த நினைவுகள்
காற்றோடு திரும்பிப் பார்க்க...
வாடிய ஆசைகளுக்கும்
புத்துயிர் கொடுத்த மனம்
காரணமே தெரியாமல்
ஆழ்ந்த பெருமூச்சு விடுகிறது.
சூரியன் மேலேற ஏற...
வயல்வெளியின் அமைதி தரும் அழகே அழகாக மிளிர்கிறது.
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%