திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வீரமங்கலம், கண்டியூர், தென்குவளைவேலி உள்ளிட்ட 27 கிராம ஊராட்சிகளில் தலா 100 மரக்கன்றுகள் வீதம் 2700 மரக்கன்றுகள் நடும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகள் கிராம சாலைகளின் இரு புறங்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்திஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, ரமணி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?