வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து; கேரள முதல்-மந்திரி விஜயன்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து; கேரள முதல்-மந்திரி விஜயன்


கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம்,


தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உள்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்கு தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் இல்லாமல் 2004ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%