அன்றாடச் செய்திகளை
அழகாகத் தந்திடுமே!
நன்றாகத் தகவல்களை
நனிசிறக்கத் தந்திடுமே!
என்றென்றும் உள்ளத்தில்
இனிதாக நின்றிடுமே!
உன்னதமாய் *த.நா.பேப்பர்*
உண்மையாக ஒளிர்விடுமே!
அரசியலும் ஆன்மிகமும்
அரவணைத்துச் சென்றிடுமே!
முரசுகொட்டித் திரைத்துறையை
முன்வந்தே உரைத்திடுமே!
உருவாகும் சிறுகதைகள்
உவந்துவந்து உதவிடுமே!
திருவாக *த.நா.பேப்பர்*
தேர்ந்தேதான் காட்டிடுமே!
மணக்கின்ற கவிதைகளை
மாண்பாகத் தந்திடுமே!
இனிக்கின்ற புதுக்கவிதை
ஈடின்றி வந்திடுமே!
கனிவாகப் பல்சுவையும்
கண்ணாகப் பதிவாகும்!
கனியாக *த.நா.இ.பேப்பர்*
கணக்காக வந்திடுமே!
மழலைக்கும் ஒருபக்கம்
மணியாகக் கண்டிடுமே!
ஒழுங்காக விடியலிலே
ஒருங்காகத் தோன்றீடுமே!
அழகான படங்களெலாம்
ஆர்வமாகப் பதிவிடுமே!
பழகிவிட்ட *த.நா.இ.பேப்பர்*
பண்பாக வந்திடுமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?