வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 14.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 14.10.25



வணக்கம். 14 .10 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் கரூர் சம்பவம் சிபிஐ மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சொன்னது இனி நடக்கப்போவதை மிக அருமையாக புரிய வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது பாராட்டுக்கள்.


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் நேற்று 1008 சங்கு அபிஷேகம் செய்யப்பட்ட சிவனின் அற்புதமான படத்தைக் கண்டு அகம் மகிழ்ந்தேன். நல்ல செய்திகளை மிக அருமையாக கொடுத்து எங்களை ஆன்மீக வழியில் நடத்திச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். திருக்குறள் எப்போதும் போல் மிக அற்புதமான பொருளாக அமைந்து பரவசத்துடன் படிக்க வைத்தது .


அடுத்தவர் கொட்டாவி விட்டால் நமக்கும் கொட்டாவி வருவதை பார்த்து இருக்கிறேன் அது எப்படி வருகிறது ஏன் வருகிறது என்று மிக அருமையான தகவலை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து தெரிந்து கொண்டேன். நல்ல தகவல் பாராட்டுக்கள் வால்பாறை அருகே அதிகாலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி பாட்டி பேத்தி பலி என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் எல்கே துளசிராம் அவர்களின் வரலாறும் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது.


பல் சுவை களஞ்சியம் பகுதியில் வந்த ஜோக்ஸை பலமுறை படித்து வாய்விட்டு சிரித்தேன். சமையலறை ஸ்பெஷலில் சமையல் டிப்ஸ்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை.


எங்கள் வீட்டு சமையலறைக்குள் நுழைந்து எங்களை ஆரோக்கியமாக வழி நடத்தும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் அருள் தரும் தெய்வம் இதழின் சார்பாக பைரவர் வேள்வியும் பைரவர் வழிபாடும் என்ற படங்கள் மிகவும் அற்புதம். நல்ல ஆன்மீக தகவல்களை கொடுத்து அரசியல் செய்திகளையும் அருமையாக கொடுக்கும் இந்த பக்கத்தை விரும்பும் மிகவும் விரும்பி தினமும் பலமுறை பார்த்து ரசிப்பேன்.


சுற்றுலா செல்வது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல.. உடல் ஆரோக்கிய சம்பந்தம் உடையது என்று சுற்றுலா பக்கத்தில் நல்ல தகவல்களை சொல்லி சுற்றுலா செல்ல வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கூட நாம் இனி சுற்றுலா சென்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு அற்புதமான உறுதி மொழியை எடுக்க வைத்த நல்ல தகவல் பாராட்டுக்கள்.


ரேக்ளா போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற காங்கேயம் காளை ரூபாய் 30 லட்சத்துக்கு விற்பனை செய்தது வாயில்லா அந்த ஜீவனுக்கு இவ்வளவு பெரிய மதிப்பு அருமையும் உள்ளது என்று மனம் மகிழ்ச்சியுடன் செய்தியை படிக்க முடிந்தது.


சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கில் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரிய தலைவர் தகவல் சொன்னது மிகவும் அருமை. இதனால் இனி இதுபோல தவறுகளை செய்பவர்கள் மனம் மாறி கடவுள் மீது நம்பிக்கை வைத்து வழிபடுவார்கள் என்று எண்ண வைத்தது.


போர் நிறுத்தம் செய்த இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பெறுகிறார் என்ற செய்தி அவரைப் பற்றியும் உலகத்தில் நடக்கும் நடப்புகளை பற்றி மிக அருமையாக சொன்னது.


செமையான செவ்வாய்க்கிழமை விடியலில் செழிப்பான செய்திகளை செக்கச் சிவந்து கிழக்கில் உதிக்க இருக்கும் ஆதவன் வருவதற்கு முன்பு எங்கள் அலைபேசியில் உலாவை விட்ட தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%