
அன்புடையீர்
வணக்கம். 16.10.25 அன்றைய தமிழ்நாடு பேப்பரில் நான் அனைத்து பக்கங்களையும் ஆர்வமுடன் தள்ளித்தள்ளி படிக்க வைத்த மெல்ல மெல்ல இனிக்கும் செய்திகள் என் காதில் நல்ல செய்திகளையே சொல்லி மகிழ்வித்தது.
திருக்குறள் மற்றும் நலம் தரும் மருத்துவம் பகுதி தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கமலா சட்டோபாத்தியாயா அவர்களின் வரலாறும் புகைப்படம் என அத்தனை பக்கங்களும் இன்ப செய்திகளாக என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.
பல்சுவை களஞ்சியம் பகுதி பரவசமூட்டும் செய்திகள் என்றால் அடுத்து வந்த வாங்க சம்பாதிக்கலாம் என்று சொந்த தொழில் செய்பவர்களை ஊக்கத்துடன் உற்சாகத்துடனும் தொடங்க வைக்கும் அற்புதமான செய்திகளாக இருந்ததா ஆவலுடன் படித்து மன மகிழ்ச்சி அடைந்தேன்.
பக்தி பரவசத்துடன் ஆன்மிக செய்திகளையும் அரசியல் செய்திகளையும் கலந்து படங்களுடன் மிக அருமையாக தொகுத்துக் கொடுக்கும் 16ஆம் பக்கம் என்றாலே அதில் ஒரு நிச்சயம் நல்ல தகவல் இருக்கும். சுற்றுலா அது நம்மை ஊக்கப்படுத்தும் ஒரு செய்திகளை கொடுப்பதால் ஆர்வமுடன் படித்து மகிழ்ந்தேன்.
கிரைம் கார்னரில் இன்றைய நாட்டு நடப்பினையும் விளையாட்டு செய்திகளில் என்னென்ன விளையாட்டுகள் எங்கு எப்படி நடைபெற்றது என்ற தகவல்களும் மிக அருமையாக கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
கடைசி பக்கம் தானே என்ற நாம் எண்ணி விடாமல் அயல்நாட்டு செய்திகளை மிக அருமையாக தொகுத்துக் கொடுத்து போர் எங்கு நடக்கிறது அதை நிற்பதற்கு என்னென்ன காரணங்கள் எந்தெந்த நாட்டில் என்ன என்ன நிகழ்வுகள் என்றெல்லாம் மிக அழகாக தொகுத்து கொடுப்பதால் ஆர்வமுடன் படித்து இன்றைய செய்திகளை புரிந்து கொள்கிறேன்.
மொத்தத்தில் சத்தமிடாமல் அமைதியாக அமர்ந்து படித்து உலகத்தை உள்ள அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?