
வணக்கம் .18 .10 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளை மிகப் படுத்தாமல் மிகத் தெளிவாக கொடுத்து மகிழ்ச்சியாக வைத்து விட்டீர்.
முதல் பக்கத்தில் எனக்கு தேவையான பஞ்சாங்கம் மற்றும் பிரதமர் மோடி அவர்களுடன் இலங்கை பிரதமர் சந்தித்தது என்று அனைத்து செய்திகளையும் மகிழ்ச்சியுடன் படித்தேன்.
திருக்குறளை ஆர்வமுடன் படித்து மற்ற செய்திகளையும் தெரிந்து கொண்டேன். நலம் தரும் மருத்துவம் பகுதியில் தினமும் எலுமிச்சை சாறு தினமும் அருந்தினால் என்னென்ன ஆகும் என்று மிக அருமையாக சொன்னது பயனுள்ள தகவலாக இருந்தது பாராட்டுக்கள்.
மிக அற்புதமான தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் அஷ்ப குல்லா கான் அவர்களின் வரலாறும் அவருடைய புகைப்படமும் அவரைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்ள உதவியது. பாராட்டுக்கள். கவிதைகள் மடல்கள் என்று வாசகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
பலதரப்பட்ட செய்திகளை கொடுக்கும் பல்சுவைக் களஞ்சியம் பக்கமும் வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க நாம் எப்படி இருக்க வேண்டும் என்று அருமையான யோசனைகளும் சொன்ன இரண்டு பக்கங்களும் அருமை. 16 ஆம் பக்கத்தில் வந்த கடவுள் படங்களும் அரசியல் நிகழ்வுகளும் பார்க்க பார்க்க பரவசமே. பாராட்டுக்கள் .
சென்னைவாசிகள் வார இறுதியில் எங்கு சுற்றுலா செல்லலாம் என்று அருமையான யோசனை சொன்னது பாராட்டுக்குரியது.
பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் இதனால் 7 ராணுவ வீரர்கள் பலி என்ற அயல்நாட்டு செய்தியையும் மிக அருமையாகவும் தெளிவாகவும் கொடுத்து அங்கு நடப்பதை நேரில் பார்ப்பது போல ஒரு உணர்வை கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளாக இருந்ததால் சனிக்கிழமை விடியல் சந்தோஷம் விடியலாக மாறியதற்கு தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமமே காரணம் என்பதால் மனம் நிறைய பாராட்டுகிறேன்.
நன்றி
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?