
இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் மடிப்பாக்கம் பிரபாவதி எழுதிய தொடர்கதைபூமர் ஜென்ட்ஸ் நல்ல கிராம கதையாக அறிமுகம் ஆகி இருக்கிறது .கதாபாத்திரங்களை கொண்டு சென்ற விதம் சிறப்பு தலைப்பை தமிழில் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
லால்குடி நாராயணன் எழுதிய ரமணி சிறுகதை, சீர்காழி சீதாராமன் எழுதிய தைரியம் சிறுகதை இரண்டுமே நல்ல கருத்தை சொல்லக்கூடியதாக இருந்தது எழுதிய எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள். புதுக்கவிதை பகுதியில் அத்தனை கருவிகளும் இடித்தன அதோட சின்னஞ்சிறு கோபு எழுதிய தீபாவளி கவிதை தீபாவளி இனிப்பாக செயல்பட இருந்ததோடு கவிதை பக்கத்திற்கு சிறப்பு சேர்த்தது. கலியுகத்தில் உலகம் எப்படி இருக்கும் என்பதை குதிரை உரிமையாளரிடம் கேட்ட மூன்று கேள்விகள் என்ற கட்டுரை மூலமாக மகாபாரத கருத்தை மிகத் தெளிவாக சொல்லி இருந்த விதம் அருமை நல்ல கருத்துக்களை நாள்தோறும் வழங்கி வரும் தமிழ்நாடு இ பேப்பர் எனது நன்றி.
கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?