இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் தலைவலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் அலட்சியம் ஆக இருந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்கிற கருத்தை சொல்லுகிற விதமாக மருத்துவப் பகுதி அமைந்து இருந்தது. அன்பழகன் எழுதிய வாழ்த்து தெரிவி த்த சூழலை சிவராமன் கதாபாத்திரம் மூலமாக மிக அழகாக எடுத்துரைத்திருந்தார். பல்சுவை களஞ்சியம் பகுதியில் நல்ல அர்த்தமுள்ள பழமையான மொழிகள் மற்றும் ஜோக்ஸ் பகுதிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் உடலில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அனுப்புவதாக பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை சொல்லுகிற பகுதியாக அமைந்து இருந்தது. சிறுகதை பகுதியில் முகில் தினகரன் எழுதிய "மழையில் கரைந்த திறமைகள் "சிறுகதை சாலையோர ஓவியர்களின் நிலையை மிக அழகாக படம் எடுத்துக்காட்டுகிற வகையில் இருந்தது. நன்னிலம் இளங்கோவன் அவர்கள் சிறிய கதை கருவை வைத்துக்கொண்டு எழுத்து வியாபாரத்தை திறமையாக செய்திருந்தார்.

கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?