தமிழ் நாடு இ. காம் பேப்பரின் இதம் நலம் தரும் இனிய பயணத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
இதுவரை எந்தப் பத்திரிகையும் அளிக்காத புதியதோர் வாசக அனுபவத்தை
தாயன்பு உள்ளத்தோடு
வழங்கி வரும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் அத்தனை பேர்களுக்கும் பாராட்டு சொல்லி மகிழ்வதில் பெருமையும் கை கூடுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்
ஆதரவு அளித்த வாசகர்களில் சிலர் என்று தலைப்பிட்டு முன்னூறுக்கும் மேலானவர்களின்
ஃபோட்டோக்களின்
அணி வகுப்பை அட்டகாசமாக வெளியிட்டு அழகு படுத்தி யிருந்ததை
எங்கள் குடும்பத்தினர்
அனைவரும் ரசித்தோம்.
சுடச்சுட செய்திகளைத் தருவதோடு நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய அனைத்துத் தகவல்களையும்
குறைவில்லாமல் தந்து நிறைந்த பணி ஆற்றி வரும் தமிழ் நாடு இ.காம் பேப்பரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எங்கள் வீட்டில் நான் மட்டும் கவிதை வாசிப்பதில் கூடுதல் ஆர்வம் கொண்டவன்.
பேப்பரை ஓப்பன் பண்ணும் போது முதலில் கவிதைப் பக்கத்துக்குத் தான் வருவேன். இந்த இரு பக்கங்களும் பல் சுவைக் களஞ்சியமாக
திகழ்கிறது. இந்த அளவுக்கு கவிதைப் படைப்பாளர்களைக் கண்டு பிடித்து வாசகர்களுக்கு நல் விருந்து படைத்து வருவதற்கு மீண்டும்
மீண்டும் நன்றி சொல்லத் தோன்றுகிறது சார்!
வாசகர் கடிதம் பகுதியில் நெல்லை குரலோன் என்ற வாசகர், தமிழ் நாடு இ
பேப்பருக்கு நன்றிக்கடனாக என்னென்ன செய்யலாம் என்று
யோசனை கேட்டிருந்தது படிப்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல யோசனைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று குறிப்பிட்டது மிகவும் ரசிக்கக் கூடியது.
பரிசுக்காக இப்படி கூற வில்லை. கொஞ்ச நாட்களாகவே என் மனதிலும் இந்த மாதிரியான சிந்தனை ஓடியது. இலவசமாக
படிக்கிறோம்...
தினசரி தவறாமல் அதிகாலையிலேயே வருகிறது... கட்டணமும் கிடையாது. ஆனால் எவ்வளவு எவ்வளவு செய்திகள்... இலக்கிய
படைப்புகள்... இதற்கு எவ்வளவு பிரயத் தனங்கள் தேவைப் பட்டிருக்கும்... இவற்றை யெல்லாம் ஓசில் படிப்பது என்ன நியாயம்?
இந்த மாதிரியான எண்ணங்கள் அடிக்கடி
தோன்றும்... நான் சொல்கிற கருத்துக்களை போட்டிக்காக என்று எடுத்தாலும் சரி...
பொதுவான அபிப்ராயமாக எடுத்தாலும் சரி...
1.தமிழ்நாடு இ.காம்
பேப்பர் வாசகர்கள்
ஒவ்வொருவரும் தலா ஒன்று முதல் ஐந்து வாசகர்களை உடனடியாக குரூப் பில்
இணைத்து விட வேண்டும். ராஜா அரண்மனை கொப்பரையில் தவறாமல் ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டும்.
எல்லோரும் தண்ணீர் ஊற்றிய கதையாக
மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பது முக்கியம் . ஏனெனில்
இது ரொம்ப ஈசியான காரியம்.. இந்த விஷயத்தில் சோம்பலை தூக்கி எறிந்து விட வேண்டும்.
2.தமிழ்நாடு இ .காம் பேப்பரை இன்னும் மேலும் மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும் என்று எல்லோரும் இறைவனிடம் பிரேயர் பண்ணலாம். இது
அவரவர் மனசாட்சி சம்பந்தப்பட்டது.
3. தமிழ் நாடு இ.காம்
பேப்பரின் வளர்ச்சிக்கு விருப்பப் பட்டவர்கள் நிதி உதவி
புரிந்து ஆதரவு அளித்து ஊக்குவிக்க லாம்.இன்னும் அதிகமான பயனை அனைவரும் பெறலாம்.
4. தமிழ் நாடு இ.காம்
குழுமத்தில் இருந்து வெளிவரும் தெய்வம்
ஆன்மீகப் பத்திரிகைக்கு அனைவரும் சந்தாவை
தவறாமல் செலுத்தி
அன்பைக் காட்ட வேண்டும்.
இந்த என் யோசனை களை வெளியிடுமாறு
தமிழ் நாடு இ.காம் பத்திரிகை ஆசிரியர் குழுமத்தினரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிச்சயம் இந்தப் புதுமையான பத்திரிகை நீடித்து மலர்ந்து கொண்டே யிருக்கும்.கடவுள்
துணையும் கட்டாயம் இருக்கும்.
எங்கள் குடும்பத்தார்
சார்பாக வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும்
தெரிவிக்கிறோம்.
பி.சிவசங்கர்
வடவள்ளி
கோவை